என்.ஜி.பி கல்லூரியில் கல்வி போதித்தல் பயிற்சி

டாக்டர் என்.ஜி.பி.கல்வியியல் கல்லூரியில், வட்டமலைப்பாளையம், கங்கா செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவர்களுக்கான ஒரு நாள் கல்வி போதித்தல் முறைகள் பற்றி பயிற்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் ராமசாமி வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, கல்லூரிப் பேராசிரியர்கள் கற்பித்தல் முறைகள், கல்வி ஊடகங்கள், அறிவு மற்றும் திறன்களை மதிப்பீடு செய்தல் குறித்த தலைப்புகளில் விளக்கங்களை அளித்தனர்.

மேலும், மாணவர்கள், அனைத்து கல்வி வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் வள மையங்களைப் பார்வையிட்டனர்.