அத்விக் கேபிடல் நிறுவனம் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அபார வளர்ச்சி

வங்கி அல்லாத நிதி நிறுவனமான அத்விக் கேபிடல் நிறுவனம் 2023 ஆம் நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

2022–ல் முடிந்த முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 109.51 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தை காட்டிலும் 0.72 கோடி அதிகம் ஆகும். ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியை பொறுத்தவரை இது 150 மடங்காக உள்ளது. இந்த காலக்கட்டத்தில் வரிக்கு பிந்தைய லாபமும் நேர்மறையாக உள்ளது. இது கடந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 0.11 லட்சம் நஷ்டத்தில் இருந்து தற்போது நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 92.66 லட்சம் லாபம் ஈட்டியுள்ளது.

ஒருங்கிணைந்த நிதிநிலையை பொறுத்தவரை மொத்த வருமானம் கடந்த நிதி ஆண்டின் 4 வது காலாண்டில் 34.12 கோடி ரூபாயிலிருந்து நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 109.51 கோடி ரூபாயாக உள்ளது. நிகர லாபத்தைப் பொறுத்தவரை கடந்த நிதி ஆண்டின் 4வது காலாண்டில் 0.18 கோடியாக இருந்தது தற்போது நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 0.95 கோடியாக உள்ளது.

இந்நிறுவனம், இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நிதி முதலீடு, நிறுவனங்களுக்கு கடன் மற்றும் முன்பணம் மூலம் நிதி அளித்தல் மற்றும் அனைத்து வகையான குத்தகை நடவடிக்கைகளுக்கு நிதி அளித்தல், குத்தகை வணிகத்தை மேற்கொள்ளுதல், வாங்குதல், விற்பனை செய்தல் அல்லது வாடகைக்கு விடுதல் அல்லது அனைத்து வகையான தொழிற்சாலை மற்றும் எந்திரங்களுக்கு கடன் உதவி அளித்தல் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் இந்நிறுவனம் தனிநபர் கடன்கள் மற்றும் முதலீடுகளில் அதிக வருமானம் கிடைக்கும் சிறு நிதி உதவி பிரிவுகள் உள்ளிட்டவைகளிலும் அதிக கவனம் செலுத்துகிறது.

 

Source: Press Release