கடலில் மைக்ரோபிளாஸ்டிக்கை உறிஞ்சும் ரோபோ மீன் – சீனா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு மைக்ரோபிளாஸ்டிக்கை உறிஞ்சும் மீன் போன்ற ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.

மைக்ரோபிளாஸ்டிக்ஸை உண்ணும் ரோபோ மீன் ஒரு நாள் உலகின் மாசுபட்ட கடல்களை சுத்தம் செய்ய உதவும் என்று தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் சீன விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

இந்த ரோபோ தொடுவதற்கு மென்மையாக இருப்பதோடு, 1.3 சென்டிமீட்டர் (0.5 அங்குலம்) அளவு கொண்டவை. இவை ஆழமான நீரில் மைக்ரோபிளாஸ்டிக்ஸை உறிஞ்சும் தன்மையை கொண்டுள்ளன. கடல் மாசுபாட்டை பகுப்பாய்வு செய்வதற்கான தகவல்களை வழங்கவும் இலக்கு கொண்டுள்ளது என்று ரோபோவை உருவாக்கிய ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான வாங் யுயான் கூறுகிறார்.

நாங்கள் இலகுரக மினியேட்டரைஸ் செய்யப்பட்ட ரோபோவை உருவாக்கியுள்ளோம். இதை பல வழிகளில் பயன்படுத்த முடியும். உதாரணமாக உயிரி மருத்துவம் அல்லது ஆபத்தான அறுவை சிகிச்சைகளில் இந்த ரோபோட்களை பயன்படுத்தி சில நோய்களுக்கு தீர்வு காண முடியும் என்கிறார்.

கருப்பு ரோபோ மீன் ஒரு ஒளியால் கதிரியக்கப்படுகிறது. இது துடுப்புகளை மடக்குவதற்கும், அதன் உடலை அசைப்பதற்கும் உதவுகிறது. இந்த ஒளியைப் பயன்படுத்தி ரோபோ மீன்கள் மற்ற மீன்களை அல்லது கப்பல்களில் மோதுவதைத் தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ரோபோ வகை மீன்களை கடலில் வாழும் மற்ற உயிரினங்களை விழுங்கினாலும், பாலியூரிதீன் மூலம் தயாரிக்கப்படுவதால், அவற்றிற்கு தீங்கு விளைவிக்காமல் செரிமானம் ஆகிவிடும். இது உயிர் இணக்கத்தன்மை கொண்டது.

இந்த மீன் மாசுக்களை உறிஞ்சி, சேதமடைந்தாலும் தன்னைத்தானே மீட்டெடுத்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கையான மென்மையான ரோபோக்களை விட வினாடிக்கு 2.76 உடல் நீளம் வரை இதனால் நீந்த முடியும். எங்கள் குழு இப்போது மைக்ரோபிளாஸ்டிக்ஸ் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். இது ஒரு மாதிரி ரோபோ, அதை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியும் என்று வாங் தெரிவிக்கிறார்.