‘ஷாப்ஸி’ முதலாம் ஆண்டு கொண்டாட்டம்

ஃபிளிப்கார்ட்டின் சமூக வர்த்தக தளமான ஷாப்ஸி இந்தியாவில் தொடங்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைகிறது. கோடிக்கணக்கான இந்தியர்கள் ஷாப்சியில் ஆர்டர் செய்ய உலாவிவரும் நிலையில், இத்தளம் அதன் எண்ணற்ற விற்பனையாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தளத்துடன் முதலாம் ஆண்டு வெற்றியை கொண்டாடுவதாக அறிவித்துள்ளது.

ஃபேஷன், அழகு, மொபைல்கள், வீடு மற்றும் பலவற்றில் 150 மில்லியன் தயாரிப்புகளுடன் 2.5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனையாளர் தளத்தை ஷாப்சி கொண்டுள்ளது.

ஃபிளிப்கார்ட்டின் நன்கு நிறுவப்பட்ட நெட்வொர்க் மற்றும் தொழில்நுட்ப திறன்களின் உதவியோடு, ஷாப்சிஅதிக நம்பகத்தன்மையை உறுதிசெய்கிறது.

இது குறித்து பிளிப்கார்ட் ரொக்கமாக்கல் மற்றும் மூத்த வளர்ச்சி துணைத் தலைவர் பிரகாஷ் சிகாரியா கூறும்போது: இந்தியாவில் தொழில் முனைவோர் துறைக்கு சாதகமாக பங்களிக்கும் அதே வேளையில், கடந்த ஒரு வருடமாக எங்களின் தொலைநோக்குப் பார்வை சிறப்பான வெற்றியைக் கண்டுள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

ஷாப்சி அதன் வாடிக்கையாளர்களிடமிருந்தும், விற்பனையாளர்களிடமிருந்தும் பெற்ற அமோகமான வரவேற்பைப் பார்க்கும்போது, இன்று நாம் காணும் நிலையான வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. எங்கள் பயணத்தில் முன்னேறும்போது, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தனி நபருக்கும் டிஜிட்டல் வர்த்தகத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம். இதன் மூலம் ஷாப்பிங்கை எளிதாக அணுகக்கூடியதாகவும் அனைவருக்கும் வசதியாகவும் ஆக்குகிறோம் என்று கூறினார்.