இன்று முதல் தற்காலிக ஆசிரியர் பணிக்காக விண்ணப்பிக்கலாம்

தற்காலிக ஆசிரியர் பணி நியமன அடிப்படையில், தமிழக அரசு இன்று முதல் ஜூலை 6ம்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலை பள்ளிகள் , உயர்நிலைபள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13 ஆயிரத்து 331 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தற்காலிக ஆசிரியர் பணி நியமனம் செய்வதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக அரசு தொடப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 10,000 , முதுநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூபாய் 12000 வீதம் 10 மாதங்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கபட்டிருந்தது.

இந்த அறிவிப்பால் கடும் எதிர்ப்பு கிளம்பிய போது முறையான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசினால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதனால், இடைநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களுக்கும் மற்றும் இல்லம் தேடி கல்வி நடத்தும் தன்னார்வலர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணிக்காக காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், ஆகியோர் அடங்கிய குழுவினர் தகுதியான ஆசிரியர்களை தேர்வு செய்ய வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், காலி பணியிடங்கள் குறித்த விபரங்கள் அனைத்தும் பள்ளி வாரியாக வெளியிடப்பட்டுள்ள நிலையில் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இன்று முதல் 6ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் இடம் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாக விண்ணப்பிக்கலாம் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலகம் மின்னஞ்சல் வாயிலாக சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்களை அனைத்தையும் 6ம் தேதி இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.