டொயோடாவின் புதிய எஸ் யூவி – அர்பன் க்ரூசர் ஹைரைடர் கார் அறிமுகம்

டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் பி-எஸ் யூ வி பிரிவில் தனது புதிய அர்பன் க்ரூசர் ஹைரைடர் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது இந்நிறுவனத்தின் முதல் செல்ப்-சார்ஜிங் ஸ்ட்ராங் ஹைப்ரிட் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும்.

டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணைத்தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர், இந்த புதியகாரை புதுடெல்லியில் அறிமுகம் செய்தார்.

சக்தி வாய்ந்த செயல் திறன், சிறந்த எரிபொருள் சிக்கனம், குறைந்த மாசு வெளியேற்றம் மற்றும் மென்மையான இயக்கம் மற்றும் காரை ஸ்டார்ட் செய்த உடன் துரித வேகம் ஆகிய சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

இதில் உள்ள 2 டபிள்யூடி என்னும் தொழில் நுட்பம் என்ஜினில் இருந்து ஒரே நேரத்தில் ஆற்றல் மற்றும் முறுக்கு விசையை வழங்குகிறது. அத்துடன் இந்த கார் இ-டிரைவ் டிரான்ஸ்மிஷன் மூலம் இயக்கப்படுகிறது. மேலும், இது வலிமை மிக்க செல்ப்-சார்ஜிங் ஹைப்ரிட் எலக்ட்ரிக்காராகவும் உள்ளது.

அத்துடன் இந்த காரை இயக்கும்போது 40 சதவீத தூரத்தையும் 60 சதவீத நேரத்தையும் மாசுவெளியேற்றம் இல்லாத வகையில் மின்சார பயன் முறையில் இயக்கும் திறன் கொண்டது. மேலும், இது புதிய மாடல் நியோடிரைவ், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உடன் 2 டபிள்யூடி மற்றும் 4 டபிள்யூடி விருப்பங்களுடன் 1.5 லிட்டர் கே-சீரிஸ் என்ஜினுடன் கிடைக்கிறது.

இந்திய அரசின் ‘மேக்இன்இந்தியா’ திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக இந்நிறுவனம் மின்சார பவர் டிரெய்ன் பாகங்களை உள்ளூரில் கொள்முதல் செய்வதோடு, இந்தியாவில் மின்மயமாக்கப்பட்ட வாகன தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.

டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணைத்தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர் கூறுகையில், ‘எங்கள் நிறுவனத்தை பொறுத்தவரை எப்போதும் இயற்கையுடன் இணைந்து இருப்பதையே அதிகம் விரும்புகிறோம். எங்கள் நிறுவனம் குறைந்த மாசு வெளியேற்றும் வாகனங்களை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்துவதோடு, நிலையான இயக்கத்தீர்வுகளை வழங்குவதிலும் முக்கிய கவனம் செலுத்துகிறது என்றார்.

‘கார்பன் நடுநிலை சமூகத்தை’ உருவாக்குவதற்கான தொலைநோக்கு பார்வையுடன், தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. இந்த இலக்குகளுக்கு ஏற்ப, அர்பன் க்ரூசர் ஹைரைடரை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் எனத் தெரிவித்தார்.

வெளிப்புறத்தை பொறுத்த வரை இந்த காரின் முன்புறத்தில் எல்இடி புரஜக்ட் விளக்கு, பகல் நேரத்தில் இயங்கும் இரட்டை எல்இடி விளக்கு, திரும்புவதற்கான இன்டிகேட்டர், அகலமான முன்புற கிரில், இரட்டை வண்ணம், ஆர்17 அலாய்வீல்கள் மற்றும் எல்இடி எச்சரிக்கை விளக்குகள் ஆகியவற்றை கொண்டுள்ளது என்று விளக்கி கூறினார்.

கேவ்பிளாக், ஸ்போர்ட்டின்ரெட், ஸ்பீடிப்ளூ, என்டிசிங்சில்வர், கபேஒயிட், கேமிங்கிரே மற்றும் மிட்நைட் பிளாக் ஆகிய 7 விதமான ஒற்றை நிறத்திலும், விருப்பினால் கருப்பு கூரையுடன் கபே ஒயிட், ஸ்போர்ட்டின்ரெட், கவர்ச்சியான சில்வர் மற்றும் ஸ்பீடிப்ளூ ஆகிய 4 இரட்டை வண்ணங்களில் கிடைக்கிறது என்றும் இந்த காருக்கு 3 ஆண்டு அல்லது 1 லட்சம் கிலோமீட்டருக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது என்று கூறினார்.