நேரு கலை கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை பாலக்காடு சாலையில் அமைந்துள்ள நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.கே. தாஸ் நினைவு கலை அரங்கில் இக்கல்லூரியின் இருபதாம் ஆண்டு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பட்டமளிப்பு விழாவிற்கு நேரு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் அனிருதன் விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார்.

நேரு கல்வி குழுமங்களின் நிர்வாக பிரதிநிதியும், நேரு இண்டர்நேஷனல் ப்ள்ளியின் தாளாளருமான டாக்டர். சைதன்யா கிருஷ்ணகுமார் தலைமை ஏற்று விழாவை துவக்கிவைத்தார்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மதர் தெரசா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வைதேகி விஜயகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துகூறி சிறப்புரை நல்கினார். மேலும் அவர் தமது உரையில் பட்டம் பெற்ற மாணவர்கள் தான் கற்ற கல்வியை மேலும் மேம்படுத்தி பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தம்பணிகளை சமூகத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

நேரு கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலையில் 22 மாணவர்களும், முதுகலையில் 7 மாணவர்களும் முதலிடம் பெற்றுள்ளனர். இக்கல்லூரியில் மொத்தம் 856 மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இவ்விழாவில் அனைத்து துறையைச் சேர்ந்த பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.