“அவர் தலைவர்” புத்தகம் வெளியிட்டு விழா

அகில இந்திய அளவில் ஆயுள் காப்பீடு முகவர்கள் ஒருங்கிணைந்த அமைப்பு லுகி எனும் லைஃப் அண்டர் ரைட்டேர்ஸ் கில்டு ஆஃப் இந்தியா. இந்நிறுவனர் ஸ்ரீநிவாசனின் தன் வாழ்க்கை வரலாற்று நூலான “அவர் தலைவர்” என்ற நூல் வெளியீட்டு விழா தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் நாக சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக தலைவர் எம்.ஆர்.குமார் நூலை வெளியிட கோவை கேபிடல் நிறுவனத்தின் தலைவர் பாலசுந்தரம் பெற்றுக்கொண்டார். சிறப்பு அழைப்பாளராக ஆன்மீக சொற்பொழிவாளர் சுகி சிவம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தன்னம்பிக்கையை ஆயுதமாகக் கொண்டு சாதாரண முகவராக இருந்த இவர் உயர் மட்டத்துக்கு வந்த விதம், தடைகள், பிரச்சனைகள், அவமானங்கள், எதிர்ப்புகள் இவற்றையெல்லாம் ஜயித்து வாழ்க்கையில் முன்னேறிய விதம், காப்பீடு துறையில் உள்ள அனைவரும் தலைவர் என போற்றும் அளவிற்கு உயர்ந்த விதம் போன்ற ஸ்ரீநிவாசன் அவர்களது 83 ஆண்டு  வாழ்க்கை வரலாறு தான் “அவர் தலைவர்” எனும் நூல்.

இந்நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளரான சுகி சிவம் கலந்துகொண்டு அவரது பாணியில் ஸ்ரீநிவாசன் அவர்களுடன் பழகிய நாட்களை பற்றியும் அவரது அனுபவத்தை பற்றியும் சிறப்புரையாற்றி சிறப்பித்தார். பின்னர் மரபின் மைந்தன் முத்தையா “அவர் தலைவர்” நூல் பற்றிய கருத்துரையாற்றினார்.