கேரளா கிளப்பில் உணவுத் திருவிழா

கோவை கேரளா கிளப்பில், சமீபத்தில் உணவுத் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார்.

கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன், முன்னாள் கோயமுத்தூர் மேயர் ராஜ்குமார், ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இதில் 34 வகையான கேரள பாரம்பரிய உணவுகள் பரிமாறப்பட்டன.

கேரளா கிளப்பின் தலைவர் அசோக் தலைமை வகித்தார். மகளிர் அணித் தலைவர் ஷைலஜா அசோக் வரவவேற்புரை ஆற்றினார். செயலர் ராஜ்குமார் மற்றும் துணைத் தலைவர் விக்ரமன் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சயில் சுமார் 450 உறுப்பினர்கள் தங்களது குடும்பத்தாருடன் பங்கேற்றனர்.