தூய்மைப் பணியாளர்களின் வேலை நேரத்தை மாற்றக் கோரி மனு

தூய்மைப் பணியாளர்களின் வேலை நேரத்தை மாற்றக் கோரியும், அவர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்கக் கோரியும் சமூகநீதி தூய்மைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் வேலை தொடங்கும் நேரம் ஆங்கிலேயர் காலத்தில் அதிகாலை 5.45 மணிக்கு தொடங்கப்பட்டது.

இன்று வரையில் அதேநேரமே உள்ளது. இதனால் 3 மணி அளவிலேயே தூய்மைப் பணியாளர்கள் வீட்டைவிட்டு பணிக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளை பராமரிக்க இயலாத சூழல் உள்ளது.

எனவே வேலை தொடங்கும் நேரத்தை காலை 7 மணிக்கு மாற்றம் செய்ய வேண்டும். மேலும் கோவையில் தூய்மைப் பணியாளருக்கு குறைந்தபட்ச தினசரி கூலி ரூ.333 ஆக உள்ளது. இதனை 605 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். என மனுவில் கூறப்பட்டுள்ளது.