சி.ஆர்.ஐ  டிரஸ்ட் சார்பில் புதிய மருத்துவமனை விரைவில் துவக்கம்

கோவை சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனம் மற்றும் அறக்கட்டளை சார்பாக கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதிகொண்ட 100 படுக்கைகளுடன் கூடிய புதிய சி.ஆர்.ஐ. டிரஸ்ட்  மருத்துவமனையை வரும் வாரத்தில் செயல்பாட்டுக்கு கொண்டுவர உள்ளது.

இதற்காக சுமார் 3 கோடி மதிப்பீட்டில் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் நிறுவனத்தின் கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள ஒரு அலுவலகத்தை கோவிட் சிகிச்சை மருத்துவமனையாக முற்றிலும் மாற்றி அமைத்து சேவை செய்ய உள்ளது. இங்கு தகுதிவாய்ந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை கொண்டு தரமான முறையில் சிகிச்சை அளிக்கப்பட  உள்ளது.

சி.ஆர்.ஐ நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் சி.ஆர்.ஐ. அறக்கட்டளையின் அறங்காவலர்கலான  சௌந்தரராஜன், மற்றும் செல்வராஜ் ஆகியோர்  தமிழக முதலமைச்சரிடம் இந்த திட்டம் குறித்த கடிதத்தை கொடுத்துள்ளனர்.

சி.ஆர்.ஐ நிறுவனம் சமூக நலனுக்காக பல ஆண்டுகளாக, தமிழ்நாடு அரசுடன் இணைந்து பல அரசு பள்ளிகளை தத்தெடுப்பது, விவசாய பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிறந்த வேளாண்மைச் செம்மல் விருது வழங்குதல், மேலும் குறைந்த செலவில் தரமான மருத்துவத்தையும் வழங்கிவருகிறது.