பிஎஸ்ஜி காதம்பரி 2018 இசை விழா

பிஎஸ்ஜி அண்ட் சன்ஸ் அறநிலை சார்பில், ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் “காதம்பரி” எனும் இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 3ம் ஆண்டு விழாவாக காதம்பரி 2018 இசை விழா ஜனவரி 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை பிஎஸ்ஜி மேலாண்மை கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. தொடக்க நாளன்று இசை மேதை டி.எம்.கிருஷ்ணாவின் இசை நிகழ்ச்சியும்,

இரண்டாம் நாளன்று, சத்குரு ஸ்ரீ தியாகராஜனின் கனராக பஞ்சரத்ன கீர்த்தனைகள் மற்றும் பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியின் முன்னாள் மாணவி டாக்டர் திவ்யதா அருணிற்கு “யுவகலா” விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருதினை ஆனைக்கட்டி ஆர்ஷ வித்யா குருகுலம் முதன்மை ஆசார்யா ஸ்ரீ சதாத்மானந்தா சரஸ்வதி அவர்களால் வழங்கப்பட உள்ளது.

மூன்றாம் நாள், விஜய் டிவி புகழ் D.சத்யபிரகாஷ்-ன் கர்நாடக இசைக்கச்சேரியும், நான்காம் நாள், பிஎஸ்ஜி மாணவர்களின் மெல்லிசை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.