இந்துஸ்தான் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்

கோவை ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மின்னணுவியல் மற்றும் கருவி பொறியியல் துறை சார்பில், 5வது தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கோவையில் உள்ள ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநர் பெரியசாமி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிகழ்வில் கல்லூரி முதல்வர் ஜெயா தலைமை உரையாற்றினார். அவர் தனது உரையில், கல்லூரியில் உள்ள துறையின் தனித்துவத்தை பற்றியும், துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சாதனைகளை பற்றியும் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பேசிய தலைமை விருந்தினர் பெரியசாமி, பொறியியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மாணவர்களின் திறமையை மேம்படுத்த பரிந்துரைத்தார். மாணவர்களின் வளர்ச்சிக்கு திறன் மேம்பாடு முக்கிய காரணியாக உள்ளது என்றும் அவர் கூறினார். இதுபோன்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாணவர்களின் முயற்சியை பாராட்டினார். சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனுபவத்தை மாணவர்களிடத்தில் பகிர்ந்து கொண்டார்.

இந்த கருத்தரங்கத்தில் 50க்கும் மேற்ப்பட்ட இன்ஜினியரிங் கல்லூரியிலுருந்து 200க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவியர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள் இதில் முதலிடம் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் முதன்மை செயல் அதிகாரி கருணாகரன், டீன் மகுடீஸ்வரன், துறை தலைவர் ஆனந்த், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.