அலைகளுக்கு அடியில் பதுங்கியிருக்கும்

கற்பனைக்கு எட்டா பல ஆச்சரியங்களைப் புதைத்து வைத்திருக்கும் பூமியில், அவ்வப்போது ஏலியன்கள் ஊடுருவல், பறக்கும் தட்டு போன்ற பல செய்திகளை ஆங்காங்கே படித்தும், கேட்டும் வருகிறோம். அந்த வரிசையில், கடலுக்கடியில் பல ஆயிரம் மீட்டர் ஆழத்தில் பதுங்கியிருக்கும் பெரும்பாலான உயிரினங்கள் வேற்று கிரக வாசிகளாக இருக்கும் போல. அதன் விசித்திரமான உருமறைப்பு, பயோலுமினென்சென்ஸ் மற்றும் இனச்சேர்க்கைப் பழக்கங்களால் சில விசித்திரமான தோற்றங்களுடன் அவைகள் காட்சியளிக்கின்றன. அதில் சில உயிரின வகைகள்.,

பீக்காக் மண்டிஸ் ஷரிம் (Peacock Mantis Shrimp)

mantis shrimp, odontodactylus scyllarus, raja ampat, west papua, indonesia

இந்திய மற்றும் வெப்பமண்டல மேற்கு பசிபிக் பெருங்கடல்களில் காணப்படும், பீக்காக் மண்டிஸ் நத்தை, நண்டு போன்று சாக்லேட் நிறத்தில் கெட்டியான மேல் ஓடு பகுதிகளைக் கொண்டது. இதன் முகப் பகுதியில் உள்ள நீண்ட கூர்மையான மூக்கு போன்று இருக்கும் துணை உறுப்பு இரையை விரைவாகக் குத்தி இழுக்கும் தன்மை கொண்டது.

பிங்க் சீ-த்ரூ ஃபேன்டாசியா (Pink See-Through Fantasia)

jellyfish, organism, bioluminescence, cnidaria, pink, marine invertebrates, box jellyfish, invertebrate, zooplankton, plankton,

பிங்க் சீ-த்ரூ ஃபேன்டாசியா ஒரு கடல் வெள்ளரி ஆகும், போர்னியோவின் கிழக்கே மேற்கு பசிபிக் பகுதியில் செலிப்ஸ் கடலில் சுமார் 1.5 மைல் ஆழத்தில் காணப்படுகிறது. இது 2007 ஆம் ஆண்டு ஆழ் கடல் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

கிறிஸ்துமஸ் ட்ரீ வோர்ம் (Christmas Tree Worm)

blue christmas tree worm, spirobranchus giganteus, namena marine reserve, fiji

விஞ்ஞானிகள் இந்த விசித்திரமான உயிரினத்தை கிரேட் பேரியர் ரீப்பின் லிசார்ட் தீவில் கண்டுபிடித்து கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ் ட்ரீ வோர்ம் என்று பெயரிட்டனர். கிளைகள் போன்று இருக்கும் பகுதி அதன் சுவாசம் மற்றும் உணவளிக்கும் உறுப்பாக செயல்படுகின்றன.

நுடிபிராஞ்ச் (Nudibranch)

neon slug nudibranch, nembrotha purpureolineolata, ambon, moluccas, indonesia

இந்த சிறிய உயிரினம் வட மற்றும் தென் துருவங்கள் மற்றும் வெப்பமண்டலங்கள் வரை ஆழமற்ற மற்றும் ஆழமான கடல்கள்  இரண்டிலும் காணப்படுகின்றனர்.

ரிப்பன் ஈல் (Ribbon Eel)

ribbon eel, rhinomuraena quaesita garman, malaysia, pazifik, pacific ocean, borneo, mabul

பொதுவாகப் பவளப் பாறைகளைச் சுற்றிக் காணப்படும், ரிப்பன் கிழக்கு ஆப்பிரிக்கா, தெற்கு ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிரெஞ்சு பாலினேசியா வரை இந்தோனேசியக் கடல் பகுதியில் வாழ்கிறது. பொதுவாக, இலை-மூக்கு மொரே ஈல் என்றும் அழைக்கப்படுகிறது.

ஃபிரில்டு ஷார்க் (Frilled Shark)

deep sea fish, frill shark found alive in numazu, japan

கிளமிடோசெலாச்சிடே குடும்பத்தில் உள்ள இரண்டு வகையான சுறா வகைகளில் ஒன்றாகும். கடலில் காணப்படும் மிக மோசமான உயிரினங்களில் ஒன்றாகும். ஏழு அடி நீளம் வரை வளரக்கூடிய ஃபிரில்டு ஷார்க் அதன் செவுள்களின் சுறுசுறுப்புக்காகப் பெயரிடப்பட்டது.