கே.பி.ஆர். கல்லூரியில் முதலுதவி கவன செய்முறை பயிற்சி

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி இளஞ்செஞ்சிலுவை மையம் ”பொது முதலுதவி கவனம்”  எனும் தலைப்பிலான செய்முறைப் பயிற்சி  நடைபெற்றது.

நிகழ்விற்குக் கல்லூரியின் முதல்வர் கீதா தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராகக் கோயம்புத்தூர், அலர்ட் அரசு சாரா அமைப்பு , திட்ட அலுவலர் மற்றும் பயிற்றுநர் வெங்கடேசன் கலந்து கொண்டார். அவர் பேசுகையில் விபத்துக் காயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி கொடுக்கும் முறைகளை ஒவ்வொரு நிகழ்வுகளுடனும் காட்சிப்படங்கள் வாயிலாக விளக்கிக் கூறினார். நம் அன்றாட வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் ஏற்படும் உடல் காயங்களுக்கு வழங்கும் சிகிச்சை முறைகளை எடுத்துரைத்தார். ஆரோக்கிய வாழ்வே அற்புத வெற்றி வாழ்க்கையைத் தரவல்லது என்பதால் மாணவர்கள் உடல் பாதிப்பு சார்ந்த விழிப்புணர்வு குறித்து அறிதல் அவசியம் என்பதை எடுத்துரைத்தார்.

இன்று மக்களுக்கு அதிகமாக ஏற்படும் இதய பாதிப்பு, மூச்சுத் திணறல், வலிப்பு, எலும்பு முறிவு, வெட்டுக்காயத்தின் போது ஏற்படும் இரத்தபோக்கினை கட்டுப்படுத்தலுக்கான செயல் முறைகளை எடுத்துரைத்தார். விபத்தின் போது அருகில் இருப்பவர்கள் முதலுதவியின் போது செய்ய வேண்டியது, செய்ய வேண்டாதது எது என்பது பற்றிய செயல்முறைகளை எடுத்துக்கூறினார்.

நிகழ்வில் மாணவர்கள், பேராசிரியர்கள் என  150க்கும் மேற்பட்டோர்   பங்கேற்றுப் பயனடைந்தனர்.