ஏ.ஐ. தவறான பயன்பாடுகளை தடுப்பது அவசியம் !

டாக்டர் எஸ். என்.எஸ் இராஜலட்சுமி கலை அறிவியல் கல்லூரியின் 16- வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அசன்ஜர், அனலிடிக்ஸ் அட்வைசரின் துணைத் தலைவரான ராஜ ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றியதோடு இளங்கலை மற்றும் முதுகலையைச் சேர்ந்த 768 மாணவர்களுக்கு பட்டம் வழங்கிப் பாராட்டினார்.

எஸ் என்.எஸ் கல்விக் குழுமங்களின் தலைவர் சுப்பிரமணியன், தொழில்நுட்ப இயக்குநர் முனைவர் நளின் விமல் குமார் ஆகியோர் தலைமையேற்றனர். கல்லூரியின் தாளாளர் மருத்துவர் எஸ். இராஜலட்சுமி வாழ்த்துரை வழங்க, முதல்வர் அனிதா வரவேற்புரை வழங்கியதோடு 2023-2024 கல்வியாண்டிற்குரிய அறிக்கையையும் வாசித்தளித்தார்.

எஸ்.என்.எஸ் நிறுவனங்களின் சி.இ.ஓ டேனியல், துணை முதல்வர் நரேஷ் குமார் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்கள் விழாவினில் கலந்துகொண்டனர். சிறப்பு விருந்தினர் பேசுகையில்,‘செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் போது பொறுப்பு மற்றும் நெறிமுறைகளை நம் மனதில் வைக்க வேண்டும் எனவும் தனியுரிமை, சுயாட்சி மற்றும் மனித உரிமைகளை மதிக்கும் வகையில் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது என்பதையும் அல்காரிதங்களில் சார்பு அல்லது தனிப்பட்ட சுதந்திரத்தை மீறுதல் போன்ற ஏ. ஐ.இன் தவறான பயன்பாட்டைத் தடுக்க வலுவாக செயல்பட வேண்டும் என்பதையும் வலியுறிதியதோடு ஏ.ஐ புதிய வாய்ப்புகள் மற்றும் தொழில்களை உருவாக்கும் திறனையும் கொண்டுள்ளது என்பதை தம் உரையினூடாககொடுத்து மாணவர்களை’ ஊக்கப்படுத்தினார்.