தொடர் கல்வி, கடின உழைப்பே வெற்றிக்கான திறவுகோல் – கல்லூரி தின விழாவில் ஆர்.சுந்தர் 

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 33வது கல்லூரி தின விழா கொண்டாடப்பட்டது.

நிகழ்வில் கல்லூரி முதல்வர் சித்ரா கல்லூரியின் சாதனைகளைப் பற்றிய ஆண்டறிக்கையை வாசித்தார்.

எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்துப்  பேசும்போது, மாணவிகள் தாங்கள் கற்ற கல்வியை நடைமுறைப்படுத்தி வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும். தொடர்ந்து கற்பதும் கடின உழைப்பும் முன்னேற்றப் பாதையில் உங்களை அழைத்துச் செல்லும் என்றார்.

சிறப்பு விருந்தினராக காக்னிசண்ட் சொல்யூஷன்ஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டுத் துறையின் துணைத் தலைவர் மாயா ஸ்ரீ குமார்  கலந்து கொண்டு, பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்ற திறன்களைப் பற்றியும் மாணவிகள் தங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் வழிகள் பற்றியும் எடுத்துக் கூறியதோடு, மாணவிகள் கல்வியின் பெருமை உணர்ந்து தங்களை மேம்படுத்திக் கொண்டு தன்னம்பிக்கையுடன் சுயமாக முன்னேற வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து கல்வி, ஆராய்ச்சி, விளையாட்டு போன்ற பல பிரிவுகளிலும் சிறந்த மாணவிகளுக்குப் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டன. கடந்தாண்டில் சிறந்து விளங்கிச் சாதனைகளைப் படைத்த பேராசிரியர்களும் பாராட்டப்பட்டனர்.