தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி  இரத்தினம் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு

இந்தியா தேர்தல் ஆணையம் கோயம்புத்தூர் மாவட்டம் மற்றும் இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி இணைந்து 100% சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி முதல் முறை வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மாபெரும் முதல் தலை முறை வாக்காளர்களுக்கான கையெழுத்து பேரியக்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்விற்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்தி குமார் தலைமை வகித்தார்.

நிகழ்வின் ஒரு பகுதியாக இரத்தினம் கல்லூரியின் மாணவ மாணவிகள் சுமார் 3500 நபர்கள் இணைந்து இந்தியாவின் வரைபட வடிவில் நின்று வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைக்க மாபெரும் கையெழுத்து பேரியக்கம் நடைபெற்றது.

இதில்  தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் சந்திர  மற்றும் கல்லூரியின் சார்பாக முதன்மை நிர்வாக அதிகாரியும், செயலாளருமான மாணிக்கம், முதல்வர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.