இளைஞர்களின் சக்தியைத் தூண்டச் செய்யும்   பெப்சி நிறுவனத்தின் புதிய விளம்பரம் வெளியீடு

உலக அளவில் புகழ்பெற்று விளங்கும் பெப்சி நிறுவனம்  தனது கிளாசிக் ‘யே தில் மாங்கே மோர்’ விளம்பரத்தை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் யாஷ் நடித்துள்ளார். இந்த விளம்பரம் மகிழ்ச்சியான பயணத்தை குறிப்பது மட்டுமல்லாமல், இந்த பிராண்டின் சிறப்பையும் வெளிப்படுத்துகிறது. ‘யே தில் மாங்கே மோர்,’ என்பது வாழ்க்கையில் இன்னும் அதிகமாக ஆசைப்படுபவர்களுக்கு செலுத்தப்படும் ஒரு காணிக்கையாகும். இது இந்த வார்த்தைகளின் முக்கியத்துவத்தை ஆழமாக ஆராய்கிறது. அயராது கனவுகளைத் துரத்துவதற்கான ஒரு சக்திவாய்ந்த அழைப்பு இது, இளைஞர்கள் தங்கள் எல்லையற்ற திறனை வெளிக்கொணரவும், மேலும் பலவற்றிற்காக எப்போதும் முயற்சி செய்யவும் ஊக்குவிக்கிறது. உலகம் முழுவதும் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. எனவே நாம் வாழ்க்கையில் செட்டில் ஆவது என்பது பெரிய விஷயம் ஒன்றுமில்லை என்பதை வலியுறுத்துகிறது. தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் சமூக எதிர்பார்ப்புகளுக்கு இடையிலான இழுபறியை பிரதிபலிக்கும் விதமாக இந்த டிவி விளம்பரம் தொடங்குகிறது. “யே தில் மாங்கே மோர்” என்னும் இந்த விளம்பரத்தில் ராக்கிங் ஸ்டார்  நடித்துள்ளார். அவர், இளைஞர்கள் தங்கள் உணர்வுகளை முழு மனதுடன் ஏற்று அதன்படி செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறார். இளைஞர்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவது, சமூக விதிமுறைகளிலிருந்து விடுபட்டு அவர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்த அவர்களுக்கு சவால் விடுகிறது. வாழ்க்கையில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், இந்த விளம்பரம் இளைஞர்களை தயக்கமின்றி தங்கள் கனவுகளைத் தொடர ஊக்குவிக்கிறது. ‘யே தில் மாங்கே மோர்’ என்ற சக்திவாய்ந்த கோஷத்துடன் முடிவடையும் இந்த பிரச்சாரம், பார்வையாளர்களின் மனதில் என்றும் அழியாத நினைவுகளை விட்டுச் செல்கிறது.

இது குறித்து பெப்சி கோலா, பெப்சிக்கோ இந்தியா நிறுவனத்தின் உணவுப் பொருட்கள் பிரிவுத் தலைவர் ஷைல்ஜா ஜோஷி கூறுகையில், எங்களின் 125 ஆண்டுக்கால பயணத்தில், தலைமுறை தலைமுறையாகக் கலாச்சாரத்தில் அழியாத முத்திரையை பெப்சி பதித்து வருகிறது. ‘யே தில் மாங்கே மோர்’ பிரச்சாரத்தின் துவக்கமானது இளைஞர்களுடனான இந்த ஆழமான தொடர்பின் கொண்டாட்டமாகும், இந்த புகழ்பெற்ற பிரச்சாரத்தின் மறுமலர்ச்சிக்கு எங்கள் விளம்பர தூதரும் சூப்பர்ஸ்டாருமான யாஷ் தலைமை தாங்குகிறார். ‘யே தில் மாங்கே மோர்’ பெப்சியின் தத்துவத்தை உறுதிப்படுத்துகிறது, மேலும் நம்மை அடக்க நினைப்போருக்கு அடங்கிப் போகாமல் நம்முடைய எண்ணங்களைத் தைரியமாகப் பிரதிபலிக்கவும் இளைஞர்களைத் தூண்டுகிறது. இந்தப் பயணத்தைத் தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் இந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம் என்று தெரிவித்தார்.