ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி சார்பில் உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு 

உலக வாய் சுகாதார தினத்தை  முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பாக இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில், வாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு நாடகம் மற்றும் நடன நிகழ்வை நடத்தினர்.

சிறப்பு விருந்தினர்களாக ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர்  தீபானந்தன் மற்றும் கோவை காந்திபுரம் C1 காட்டூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் சிவனு ஆகியோர்  பங்கேற்று விழாவினை தொடங்கி வைத்தனர்.

பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொது மக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சார சீட்டுகள் வழங்கினர். இது பொது மக்களுக்கு வாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

நிகழ்ச்சியைப் பல் மருத்துவக் கல்லூரியின் ஈறு நோய் தடுப்பு பிரிவு மற்றும் சமூக பல் பாதுகாப்பு மற்றும் தடுப்பு பிரிவு இணைந்து நடத்தியது குறிப்பிடத்தக்கது.