மருத்துவ தொழில்நுட்பத்தில் கே.எம்.சி.ஹெச் முன்னிலை!

– டாக்டர் அருண் பழனிசாமி

கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் தேசிய அளவிலான மூன்று நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

அசோசியேஷன் ஆப் கார்டியாக் இமேஜிங் என்ற அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும்  கருத்தரங்கம் நடத்துவது வழக்கம்.  அதன் வகையில், இந்தாண்டு 13-வது தேசிய கருத்தரங்கை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை, இந்திய ரேடியாலஜிகல்,  இமேஜிங் அசோசியேஷனின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மையங்கள் ஆகியோர் இணைந்து  அக்டோபர் 13 முதல் 15-ம் நடத்துகின்றன.

இக்கருத்தரங்கை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்  நல்லா ஜி பழனிசாமி துவக்கி வைத்தார். இதில்  இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து கார்டியாக் இமேஜிங் நிபுணர்கள் பங்கேற்று அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். மேலும், கார்டியாக் மாக்னடிக் ரிசனன்ஸ் பயிற்சி வகுப்புப்  நடைபெற்றது.

இதில் பங்கேற்றவர்களுக்கு அதிநவீன மருத்துவ மென்பொருள் மூலம் மாக்னடிக் ரிசனன்ஸ் பற்றிய விளக்கம் அளித்து, அதனை கையாளும் முறை குறித்து  நேரடி விளக்க செயல் செய்து காண்பிக்கப்பட்டது.

இதையடுத்து, கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி பேசுகையில், மருத்துவர்களுக்கு அதி நவீன தொழில்நுட்பங்களில் பயிற்சி அளிப்பதில் கே.எம்.சி.ஹெச் கவனம் செலுத்தி வருகிறது. ஒரு விநாடிக்குள் இருதயத்தை ஸ்கேன் செய்யும் திறன் படைத்த அதிவேக டூவல் சோர்ஸ் சிடி ஸ்கேனரை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை பெற்றுள்ளது ., என பேசினார்.

மேலும், மருத்துவ தொழில்நுட்பத்தில் எப்போதும் முன்னிலையில் கே.எம்.சி.ஹெச் இருந்து வருகிறது என்பதற்கு இந்த அதிநவீன கார்டியாக் இமேஜிங் கருத்தரங்கு ஒரு சான்றாகும்., என கே.எம்.சி.ஹெச் செயல் இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி கூறினார்.

இதில், கதிரியக்க துறை தலைவர் மேத்யூ செரியன்,அசோசியேஷன் ஆப் கார்டியாக் இமேஜிங் தலைவர் விஜயபாஸ்கர், நோரி மற்றும் உதவி தலைவர் விமல் ராஜ்,  கருத்தரங்கு செயலாளரும் கார்டியோதொராசிக் கதிரியக்க சிகிச்சை நிபுணருமான  புதியவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.