ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிறுநீரக விழிப்புணர்வு

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறுநீரக ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோயால் ஏற்படும் அபாயங்கள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

சிறுநீரக நோயை சரியான நேரத்தில் கண்டறியவும் மற்றும் சிறுநீரக நோயின் தாக்கத்தை தடுக்கவும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி உதவியது. இந்த முக்கியமான நாளில் மக்கள் தங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை பற்றியும் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சையின் அவசியத்தை பற்றியும் இந்த விழிப்புணர்வின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. இந்நிகழ்ச்சியில் Dr.ராஜகோபால்,மருத்துவ இயக்குநர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, Dr. அழகப்பன் மருத்துவ கண்காணிப்பாளர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை. Dr. செழியன், சிறுநீரக மருத்துவ ஆலோசகர் மற்றும் Dr. காத்தமுத்து, சிறுநீரக ஆலோசகர் & ஆண்ட்ரோலஜிஸ்ட் , இந்நிகழ்வில் உரையாடினர் .

மேலும் துறை மருத்துவர்கள், Dr.மதுசங்கர் மற்றும் Dr. கணேஷ் பிரசாத், Dr. கற்பக வள்ளி, செவிலியர்கள், 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் “உலக சிறுநீரக தினம்-2024” விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டார்கள். 2024 ஆம் ஆண்டின் உலக சிறுநீரக தினத்தின் கருப்பொருள் “அனைவருக்கும் சிறுநீரக நலம் – சம அளவிலான மேம்படுத்தப்பட்ட சிகிச்சை அணுகுமுறை மற்றும் அளவான மருந்து பயன்படுத்துதல்”. சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதற்கும் சிறுநீரக நோயை விரைந்து தடுப்பதற்கு உதவும் விஷயங்களைத் இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பகிர்ந்தார்கள்.
உலகளவில், லட்சக் கணக்கான மக்கள் சிறுநீரகம் மற்றும் சம்பந்தப்பட்ட நோயால் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

மேலும் சரியான கவனம் செலுத்தப்படாவிட்டால் சில சமயங்களில் உயிரிழப்புக்கு வழிவகுக்கிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான சிகிச்சை பராமரிப்பு மற்றும் உதவிகளை வழங்குவதில் முன்னோடியாக உள்ளது.

சிறுநீரக நோயின் வளர்ச்சியைத் தடுக்க சரியான நேரத்தில் கண்டறிதல் மற்றும் தேவையான நுண்ணுயிர் (antibiotics) மருந்துகள் மூலம் கட்டுக்குள் வைக்க முடியும். மேலும் பறித்துரைக்கப்படாத(antibiotics) நுண்ணுயிர் மருந்துகள் உயிருக்கு ஆபத்தானது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, சிறுநீரக ஆரோக்கியத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய சிறந்த ஸ்கிரீனிங் திட்டங்களில் வலிமைபெற்றது. வழக்கமான உடல்நலப் பரிசோதனைகள், சிறுநீரக மருத்துவர்களால் தகுந்த சிகிச்சை விரைவாகத் தொடங்கி, நோயை கட்டுக்குள் வைக்க உதவுகிறது டயாலிசிஸ் தேவைப்படும் நபர்களுக்கு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை அதிநவீன மருத்துவ தொழில்நுட்பத்துடன் சிறுநீரகவியல் நிபுணர்கள் மூலம் ஹீமோடையாலிசிஸ் (hemodialysis) மற்றும் பெரிட்டோனியல் டயாலிசிஸ் (peritoneal dialysis) சேவைகளை வழங்கி, சிறுநீரக செயலிழப்புக்கு பின் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ ஊக்குவிக்கிறார்கள்.

சிறுநீரக மாற்று சிகிச்சை நீண்ட கால சிறுநீரக செயல்பாட்டுக்கு சிறந்த வாய்ப்பாக உள்ளது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உறவினர்களிடம் இருந்து நன்கொடையாக பெறுவது அல்லது இறந்தவர்கள் உடையதாக இருக்கலாம், இது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மிகவும் எளிதாக்குகிறது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அறுவை சிகிச்சை நிபுணர்கள், சிறுநீரக மருத்துவர்கள் மற்றும் துணைப் பணியாளர்கள் ஆகியோரைக் கொண்ட குழு முழு விரிவான சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவுகிறார்கள்.

உங்கள் மருத்துவரின் அறிவுரையை பின்தொடர்வது, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சீரான உணவு, அளவான உப்பு உட்கொள்ளுதல், அதிக தண்ணீர் பருகுதல் மற்றும் தேவைக்கேற்ப மருந்துகளை பின்பற்றுவது சிறுநீரகங்களை பாதுகாத்து அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என இந்த உலக சிறுநீரக தின விழிப்புணர்வு நிகழ்வில் கூறப்பட்டது.