நேரு கல்லூரியில் கான்கார்ட் – 2024 விழா

நேரு விமானவியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் கான்கார்ட் – 2024 விழா நடைபெற்றது. விழாவிற்கு நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான கிருஷ்ணகுமார் வாழ்த்துரை வழங்கினார். நேரு கல்வி குழுமங்களில் செயல் இயக்குநர் நிர்வாகம் மற்றும் அகடமிக் பேராசிரியர் நாகராஜா வாழ்த்துரை வழங்கினார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக இ-பேப் வயர் அண்ட் கேபிள்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரொட்டேரியன் குருதீப் சிங் ஆனந்த் கலந்துகொண்டார். தொடர்ந்து, மாலை 4 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியின் நிறைவு பகுதியில் சிறப்பு விருந்தினராக கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி பக்தவச்சலம் கலந்துகொண்டார்.

தொடர்ந்து அவர் மாணவர்களிடம் பேசுகையில், ‘நேரு விமானவியல் கல்லூரியின் தலைவர் பி. கே. தாஸ் என் 50கால வருட நண்பராவார். கோவையில் ஏரோநாட்டிக்கல் கல்லூரியை தொடங்கி கோவைக்கு பெருமை சேர்த்தவர். இக்கல்லூரியின் ஒவ்வொரு வளர்ச்சியும் எனக்கு நன்றாக தெரியும். விமானவியல் படிப்பை விரும்பி தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள் உலகம் முழுவதும் நல்ல வேலை வாய்ப்பை பெறுகின்றார்கள்.

மாணவர்கள் நீங்கள் அனைத்து போட்டிகள் மற்றும் விழாக்களில் கலந்துகொண்டு பரிசுகளை வெல்ல வேண்டும். நேரத்தை வீணடிக்க கூடாது. உங்கள் பெற்றோர்களின் எதிர்பார்ப்பு நீங்கள் முன்னேற வேண்டும் என்பதுதான். நீங்கள் அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி வாழ்க்கையில் சிறந்தவர்களாக முன்னேற வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கனவு உங்கள் கையில் தான் உள்ளது. அவர் நினைத்தபடி இந்தியா வல்லரசாக வேண்டும் எனில் மாணவர்களாகிய நீங்கள் நன்றாக படித்து உங்கள் வாழ்க்கையையும், நாட்டின் முன்னேற்றத்திலும் மிக முக்கிய பங்கு வைக்க வேண்டும்’ இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பிரபல விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் கர்நாடிக் அண்ட் சினிமாடெக் சிங்கர் பாலாஜி ஸ்ரீ, விஜய் டிவி, சன் டிவி புகழ் மற்றும் லிம்கா உலக சாதனை ஹோல்டர் மிஸ்டர் கோவை அசோக், சன் டிவி, விஜய் டிவி புகழ் அசோக் அண்ட் மிஸ்டர் ஆனந்த், சன் டிவி புகழ் டூயல் வாய்ஸ் சிங்கர் அணில் கும்ப்ளே, பிளவர்ஸ் டிவி புகழ் வெரைட்டி டான்ஸர் பிரேம், வண்ணத்திரை சின்னத்திரை புகழ் கமல் கதிர், சின்னத்திரை சிங்கர் எஸ். எஸ். கீர்த்தனா ஆகியோர் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளை நேரு விமானவியல் கல்லூரியின் துறைத் தலைவர் பேராசிரியர் ஆர் சுந்தர வடிவேலு, டீன் மற்றும் இயக்குந’ர் முனைவர் பி.ஆர் பாலாஜி, எம்.பி.ஏ. துணைத் தலைவர் பேராசிரியர் மல்லிகா ஏரோநாட்டிக்கல் மெயின்டனன்ஸ் இன்ஜினியரிங் ட்ரைனிங் மேலாளர் திரு ஏ ரமேஷ்பாபு ஆகியோர் செய்திருந்தனர்.