ஸ்மார்ட் சிட்டியில் இப்படி ஒரு குப்பைத்தொட்டி

கோவை மாநகராட்சிக்கு ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்து கிடைத்ததில் இருந்து பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குளங்கள் தூர்வாரப்பட்டு குளக்கரைகள் மேம்படுத்தப்பட்டு நவீன பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதே நேரத்தில், மாநகராட்சி நிர்வாகம் குப்பை மேலாண்மையில் கோட்டை விடுவது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டி பாழடைந்த நிலையில் உள்ளது. குப்பைத்தொட்டியின் இருபுறங்களும் சேதமடைந்துள்ள நிலையில் பொதுமக்கள் குப்பைகளை சாலையில் வீசி எறிந்து சென்று வருகின்றனர்.

ஆட்சியர் அலுவலகம் அருகில் குப்பைகள் சாலையில் சிதறிக் கிடக்கின்றன. ஸ்மார்ட் சிட்டியில் இப்படியுமா ஒரு குப்பைத்தொட்டி என்று வேதனை தெரிவித்துச் செல்கின்றனர் இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள்.