வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா

அப்பா, அம்மாவோடு வருகை தந்த விஜய்.

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் அப்பாவும், அம்மாவும் கலந்து கொண்டுள்ளதால் ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர். வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில், ஏற்கனவே இப்படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி, ஆராரிராரோ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.