உடல் பருமன் நோயால் பாதிக்கப்படும் பெண்களுக்கு  மூட்டுவலியும் வருகின்றன – டாக்டர் ரெக்ஸ்

உடல் பருமன் நோயால் இன்று கோடிக்கணக்கான மக்கள் பதிக்கப்பட்டுள்ளனர். இதில் 73% மக்கள் நகரத்தில் வசிப்பவர்கள். இதற்கு முக்கிய காரணம் நமது வாழக்கை முறை மற்றும் உணவுப்பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஆகும். உடல் பருமன் நோயினால் இதய நோய், பக்கவாதம், சர்க்கரை நோய் சில வகையான புற்றுநோய்களும் முக்கியமாக மூட்டுவலியும் வருகின்றன. உடல்பருமன் நோயால் 58.3% பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ளவேண்டும். பொதுவாக ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரின் உடல் வடிவமைப்புகளும் வேறுபட்டதாக இருக்கின்றன.

பெண்களின் இடுப்புப் பகுதி விரிவடைந்து இருக்கும். இதனால் உடல் எடை கூடும்பொழுது கொழுப்பானது இடுப்பைச் சுற்றி, பின்புறம், வயிறு, மற்றும் தொடைப்பகுதியில் சேர ஆரம்பிக்கும். அதனால் உடல் எடையானது உடலில் மத்திய பகுதியில் அதிகரிக்கும். உடலின் எடையை தாங்கும் மூட்டுகளான முழங்கால் மூட்டுகளுக்கு அதிக பளு ஏற்படும். முழங்கால் மூட்டுகளில் இரண்டு மூட்டுகளை சுற்றி ஜெல்லி போன்ற பகுதி உள்ளது.

இது மூட்டு இலகுவாக அசைவதற்கு உதவி செய்யும். இரண்டு மூட்டுகளுக்கு நடுவே குறுத்தெலும்பு இருக்கும். பெண்களுக்கு எடை கூடும்பொழுது மூட்டில் அழுத்தம் அதிகமாகி பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். மூட்டைச் சுற்றி உள்ள ஜெல்லி போன்ற பகுதி கொஞ்சம் கொஞ்சமாக தேய்ந்த பின்பு முற்றிலும் இல்லாமல் போய்விடும். அதன்பின்பு குறுத்தெலும்பு  மூட்டுப்பகுதியில் உரச ஆரம்பித்து குறுத்தெலும்பு மற்றும் மூட்டுகள் தேய ஆரம்பிக்கும். இதனால் மூட்டுப்பகுதியில் வலி ஆரம்பிக்கும். வலியைத் தவிர்க்க நாம் நடக்கும்போது சாய்ந்து நடக்க ஆரம்பிப்போம். அவ்வாறு செய்வதால் முழங்கால் அமைப்பு மாற ஆரம்பித்து அதிகமான தேய்மானம் ஏற்படுகிறது. பெண்களின் உடற்கூறு ஹார்மோன், மற்றும் மாதவிடாய் ஆகிய காரணங்களால்  எழும்பின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். இதனால் எலும்பு முறிவு மற்றும் மூட்டுவாதம் ஏற்படலாம்.

பெண்களுக்கு உடல் எடை கூடுவதால் வரும் மூட்டு வலி அதிகம். ஆனால் நோயாளிகள் உடனடியாக மருத்துவரை நாடுவதில்லை. குறிப்பாக பயம் மற்றும் அறுவை சிகிச்சை செய்தால் தன் குடும்பத்தினரை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்று என்னியே மோசமான நிலையிலேயே பெண்கள் மருத்துவரிடம் வருகின்றனர். ஆரம்ப நிலை என்றால் மருந்து, உடற்பயிற்சி மற்றும் வாழக்கை முறை மாற்றங்களை செய்தாலே போதும். மிகவும் முற்றிய நிலை என்றால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைதான் செய்ய முடியும் என்று டாக்டர் ரெக்ஸ் கூறினார்.

தற்போது செயற்கை நுண்ணறிவு காலம். முழு ஆட்டோமேட்டிக் ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முறை ரெக்ஸ் மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த முறையில் நோயாளிகளின் பாதிக்கப்பட்ட மூட்டுகள் ஸ்கேன் செய்யப்படுகிறது. எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதோ அந்த பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு புது இம்ப்ளான்ட் பொருத்தப்படுகிறது. இதனால் எலும்பு இழப்பு மற்றும் இரத்த இழப்பு மிகவும் குறைவு. வலி மிக மிகக் குறைவு. நோயாளிகள் மிக விரைவில் குணமாகி வீடு செல்வதும் குறிப்பிடத்தக்கது.