தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் மாணவர்களுக்கு நெல் நடவு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்த அறிவியல் தொழில்நுட்பங்களைக் கொண்டு தானாக நெற்பயிர் பயிரிட வேண்டும் என்ற நோக்கத்தில் இளமறிவியல் (வேளாண்மை) மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் நன்செய் பண்ணையில் நெல் நடவு செய்தனர்.

மாணவர்களுக்காக வழங்கப்பட்ட 4 சென்ட் அளவு நிலத்தில் காலை 6.30 மணியளவில் மாணவர்கள் நடவுப் பணியை செய்ய துவங்கினர். அவர்கள் சேற்றுழவு முதல் அறுவடை முதலான அனைத்து பணிகளை செய்தனர். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நடவு விழாவை துவக்கி வைத்தார்.

உழவியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் பரசுராமன் மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.

இதில் வேளாண்மை முதன்மையர் வெங்கடேச பழனிச்சாமி, பயிர் மேலாண்மை இயக்ககத்தின் இயக்குனர் கலாராணி, தேர்வு கட்டுப்பாட்டாளர் பாலசுப்ரமணி, விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன், பயிர் பாதுகாப்பு மையத்தின் இயக்குனர் சாந்தி, நீர் நுட்பமையத்தின் இயக்குநர் பழனிவேலன், விதை மையத்தின் இயக்குனர் உமாராணி ஆகியோர் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கருத்துரு மற்றும் செயல் விளக்கங்களை பார்வையிட்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார்கள்.