கே.ஐ.டி கல்லூரியில் ஹேக்கத்தான் துவக்க விழா

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் “HACKATHON – 405 FOUND” ன் தொடக்க விழா கே.ஐ.டி கருத்தரங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கணேஷ் திருநாவுக்கரசு (Regional Head Academic Interface Programme, Talent Acquition Group, TCS, Chennai) கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசினார்.

மேலும் அவர் மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிய வேண்டும் என்றால் மாணவர்கள் தங்களை எப்படி தயார்படுத்தி கொள்ள வேண்டும் என்று விளக்கினார்.

அனைத்து துறை மாணவர்களும் கோடிங் முறையை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதன் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துரைத்தார்.

மேலும் அவர் மாணவ மாணவிகளுக்கு வினாடி வினா நடத்தி அதில் சிறப்பாக பதில் கூறியவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

இவ்விழாவில் கல்லூரி துணைத்தலைவர் இந்துமுருகேசன் தலைமை தாங்கினார். கல்லூரி டீன் (Placements) மஹாலட்சுமி வரவேற்புரை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் மோகன்தாஸ்காந்தி, கல்லூரியின் துணை முதல்வர் ரமேஷ், கல்லூரியின் டீன் (Academic and Research) ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.