
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்ததாக சமீபத்தில் உஸ்பெகிஸ்தான் அரசு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியது.
அதில் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் உள்ள ‘மரியான் பயோடெக்’ நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட அந்த இருமல் மருந்தைக் குடித்ததால் தான் 18 குழந்தைகள் உயிரிழந்ததாகத் தெரிவித்துள்ள உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை, ‘Dok 1 Max Syrup’ என்ற இருமல் மருந்தின் பெயரையும் குறிப்பிட்டதோடு, மரியான் பயோடெக் நிறுவனத்திற்கு எதிராக அந்நாட்டு அரசு வழக்கு தொடர்ந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் நொய்டாவில் உள்ள அந்நிறுவனத்திற்குச் சென்று ‘Dok 1 Max Syrup’ மருந்தை ஆய்வு செய்தனர்.
முடிவில் மருந்தில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, Dok-1 Max மருந்து உட்பட அனைத்து மருந்து தயாரிப்பையும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நிறுத்த உத்தரவிட்டிருந்தது.