100 மில்லியன் மக்கள்தொகையில் 51 விருதுகள்!

இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் உயரிய விருதாகக் கருதப்படுவது ‘பாரத ரத்னா’ ஆகும். கலை, இசை, நடனம், அறிவியல், விஞ்ஞானம், விளையாட்டு, அரசியல் உள்ளிட்ட அவரவர் துறைகளில் வியத்தகு சாதனைகள் படைத்தவர்களுக்கு மத்திய அரசி ‘பாரத ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்கிறது.

அந்தவகையில், சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு 2024 ஆம் ஆண்டுக்கான ‘பாரத ரத்னா’ விருது அறிவித்தது. கர்பூரி தாக்கூர், எல்.கே.அத்வானி, பி.வி. நரசிம்ம ராவ், எம்.எஸ். சாமிநாதன் சௌத்ரி சரண் சிங் ஆகியோருக்கு விருது அறிவித்துள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு 10 கோடி (100 மில்லியன்) மக்கள்தொகைக்கும் மாநிலத்தில் எத்தனை ‘பாரத ரத்னா’ விருதுகள் பெற்றுள்ளன? என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. மேலும், மஹாராஷ்ட்ரா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இதுவரையிலும் 51 ‘பாரத ரத்னா’ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.