அறிவாற்றலுடன் அன்பு ஆற்றலும் பெருக வேண்டும்.  – சரஸ்வதி கண்ணையன் 

இந்துஸ்தான் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் இருபத்தைந்தாம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டு விழா  பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.  பாரத நாட்டியம் தொடங்கி மேற்கத்திய நடனம், நம் தமிழர்களின் பாரம்பரிய நடனம் என்று பல்வேறு விதமான நடனத்தில் மாணவ மாணவியர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

கடந்த ஆண்டு 10 மற்றும் 12  வகுப்புகளில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியருக்குச் சான்றிதழ்,வெற்றிக் கோப்பை மற்றும் உதவித்தொகையும் வழங்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டின் தலை சிறந்த மாணவ மாணவியருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சரஸ்வதி கண்ணையன் தலைமை ஏற்றுச் சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில், மாணவர்கள் தான் எதிர்கால இந்தியாவை உருவாக்க முடிந்த சக்திகள் அந்த சக்தி உலகை வியக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. இன்றைய காலகட்டத்தில் அறிவாற்றல் பெருகி உள்ளது அதோடு அன்பு ஆற்றலும் பெருக வேண்டும். பெற்றோர்கள் ஆசிரியர்கள் சமுதாயத்தை மதிக்கும் பண்பு வளர வேண்டும். மாணவ சிற்பிகள் கல்வி என்னும் சிற்பத்தை மட்டும் அல்ல காலம் எனும் சிற்பத்தையும் அழகாகச் செதுக்க வேண்டும் என்றார்.

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலர் பிரியா சதீஸ் விழாவில் சிறந்த மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார். இந்துஸ்தான் கல்வி நிறுவன சேர்பெர்சன் யமுனா சக்திவேல் விழாவை ஒருங்கிணைத்தார் பள்ளி முதல்வர் செண்பகவள்ளி வரவேற்புரை வழங்கினார்.இதில்  ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும்  மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.