செக்யூரிட்டி சந்தையில் முதலீட்டு விழிப்புணர்வு

வி.எல்.பி ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம் சிஎஸ் / ஐடி துறை சார்பாக ‘செக்யூரிட்டி சந்தையில் முதலீட்டு விழிப்புணர்வு’ என்ற தலைப்பிலான விருந்தினர் விரிவுரை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்லூரி துணை முதல்வர் டாக்டர் வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார். சென்னை, சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீஸ் லிமிடெட் பஷீர் அகமத் மற்றும் சென்னை, பிஎஸ்இ லிமிடெட், பத்ரி நாராயணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

இவர்கள் தங்களது உரையில் முதலீட்டு விழிப்புணர்வு குறித்தும், சொத்துகள் வளர்ச்சி ஆகியவற்றில் வருமானத்தை ஈட்டுவதில் நிதித் திட்டமிடுதல் குறித்தும் சந்தைப் பங்கில் எதிர்பார்க்கக் கூடிய சிக்கல்களைத் தீர்ப்பது குறித்தும் முதலீட்டின் மீதான விகிதம் மற்றும் பணக்கட்டுப்பாடு, கடன் வழங்குதல், கடன் வாங்குதல் ஆகியவற்றைத் தெளிவு படுத்தினார் சந்தை நிலவரம் மற்றும் பல்வேறு திட்டங்கள் பத்திரங்களில் முதலீடு செய்யும் போது இருக்க வேண்டிய கவனம், போர்ட் போலியோ நிர்வாகத்தைப் பற்றிய அறிவைப் பெறுதல் ஆகியவற்றை வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் உதவிப் பேராசிரியர் மணி வர்மா வரவேற்பு வழங்கினார். பேபி சரண்யா நன்றி வழங்கினார்.