கே.பி.ஆர். கலை கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் கணினி அறிவியல் துறை  மற்றும் தரவு பகுப்பாய்வுத் துறை, ‘கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வுகளின் சமீபத்திய போக்குகள்’ குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் 2024 (ICRTCSDA’24) நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராகக் கூகுள் கிளவுட் இயக்குநர்  ஆனந்த்குமார் குமரவேலு, பசிபிக் பல்கலைக்கழக பேராசிரியர் மஃபாஸ் ரஹீம், மைசூர் பல்கலைக்கழக பேராசிரியர் குரு ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினர்.

நிகழ்வில் பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளை வழங்கினர். சிறந்த ஆய்வுக்கட்டுரைக்கான விருது ஆசிரியர், மாணவர்  இருவருக்கும் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

கல்லூரி முதல்வர் முனைவர் கீதா, கணினித்துறையின் புல முதன்மையர் சர்மிளா , கணினி அறிவியல் தரவு பகுப்பாய்வுத் துறைத் தலைவர் சத்தியவதி, பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் என 1200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.