விஐ -ன் புதிய ‘ஐஓடி ஸ்மார்ட் சென்ட்ரல்’  அறிமுகம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை நிறுவனமும், ஐஓடி( இன்டர்நெட் ஆப் திங்ஸ்) சேவைகளை வழங்கும் முன்னணி நிறுவனமாகத் திகழும்  விஐ -ன் தொழில்துறை பிரிவான விஐ பிஸினெஸ், சமீபத்தில் விஐ பிஸினெஸ் ஐஓடி ஸ்மார்ட் சென்ட்ரல்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த விஐ பிஸினெஸ் ஐஓடி ஸ்மார்ட் சென்ட்ரல், எதிர்கால தொழில்நுட்பங்களுக்கேற்ற வகையில், முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டு, ஐஓடி இணைப்பு தொழில்நுட்பத்தை சுயமாகப் பராமரிக்கும், சாதன மேலாண்மை தளமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயங்குதளமானது, நிகழ் நேரத்தில் தொலைவில் இருந்தபடியே ஐஓடி சொத்துக்களைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும், நிர்வகிக்கவும்  அவசியமான வாய்ப்புகளை தொழில்துறை நிறுவனங்களுக்கு வழங்குகிறது.

மேலும் வாகனத்துறை, வங்கியியல், உற்பத்தித் துறை உள்ளிட்ட  பல்வேறு தொழில்துறைகளில் உள்ள எளிமையானது முதல் சிக்கலான திட்டங்கள் வரை அனைத்தையும் தொலைதூரத்தில் இருந்தபடியே நிகழ் நேரத்தில் நிர்வகிக்கவும், சிம் லைஃப் சைக்கிளைக் கட்டுப்படுத்தவும் நிறுவனங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுகிறது. அதேபோல் மிக சிக்கலான பிரச்னைகள் மீது கவனம் செலுத்துவதன் மூலம் முன்னெச்சரிக்கை அறிவிப்புகளுடன், செயல்பாட்டுச் சூழலில் நிறுவப்பட்டிருக்கும் எந்தவொரு ஐஓடி சாதனத்திற்கும் அதன் நிகழ் நேர நிலை அறியும் சோதனை மற்றும் தொலைநிலை சரிசெய்தல் உள்ளிட்ட அம்சங்களை வழங்குகிறது. இவற்றுக்குப் பொருந்துகிற வகையில் வடிவமைக்கப்பட்ட கட்டண திட்டங்களையும் செயல்படுத்தும் வாய்ப்புகளை நிறுவனங்களுக்கு அளிக்கிறது.

இது குறித்து வோடஃபோன் ஐடியா நிறுவனத்தின் நிர்வாக துணைத்தலைவர் மற்றும் ஐஓடிபிசினஸ் பிரிவின் தலைமை நிர்வாகி. அமித் சத்பதி ஆகியோர் கூறுகையில், “ஐஓடி-யை பின்பற்றுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, அடுத்த பத்தாண்டுகளில் மிகப்பெரும்  ஐஓடி பயன்பாட்டுச் சூழலை உருவாக்குவதோடு, மிகப்பெரும் வளர்ச்சியையும் உண்டாக்கும்.  இதன் மூலம் கோடிக்கணக்கான இணைப்பு தொழில்நுட்ப சாதனங்களையும் செயல்பட வைக்கும். இதன் மூலம் பல்வேறு தொழில்துறை நிறுவனங்கள் தங்களது ஐஓடி சாதனங்களை ஒரே இடத்தில் இருந்தபடியே நிர்வகிக்கவும், சரியான செயல்பாடுகளா எனக் கட்டுப்படுத்தவும், இணைப்பு தொழில்நுட்பத்தின் அம்சங்களைக் கட்டுப்படுத்த முடியும்.. இந்தியாவில் ஐஓடி-ன் வளர்ச்சிப் பாதைக்கு உகந்த சூழலை உருவாக்க இந்திய அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளை நாங்கள் மனதாரப் பாராட்டுகிறோம். டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் மற்றும் ஐஓடி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் போன்ற முன்முயற்சிகள் நாட்டில் ஐஓடி-யை பின்பற்றுவதை மேலும் அதிகரிக்கும்.’’ என்றார்.