தமிழக அளவிலான குத்துச்சண்டை பயிற்சி முகாம்

ஈங்கூர், இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் தமிழக அளவிலான குத்துச்சண்டை பயிற்சி முகாம் நடைபெற்று வருகின்றது.

இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியின் உடற்கல்வித்துறையும், ஈரோடு மாவட்ட பள்ளிக்கல்வி SGFI-யும் இணைந்து 2023- 2024ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டி டெல்லியில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் தேசிய அளவில் பள்ளி மாணவிகள் பங்கேற்க உள்ளனர். இதில் இந்தியாவிலிருந்து அனைத்து மாநிலங்களிலிருந்தும் 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.

இதில் தமிழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களிலிருந்தும் 25 மாணவிகள் தமிழக அணிசார்பாக பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கான பயிற்சி முகாம் டிசம்பர் 22 முதல் 29 வரை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இருந்து சென்னிமலை செல்லும் வழியில் ஈங்கூர் அருகில் அமைந்துள்ள இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

இப்பயிற்சி முகாமில் பங்கேற்கும் 25 மாணவிகளுக்கு தங்குமிடம் மற்றும் அனைத்து விதமான அடிப்படை வசதிகளையும் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மற்றும் ஈரோடு மாவட்ட பள்ளி கல்வி சார்பாக வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சி முகாமில் பங்கேற்ற மாணவிகளுக்கு குத்துச்சண்டை விளையாட்டில் உள்ள அனைத்து நுணுக்கங்களையும் நன்கு கற்றுத்தரப்படும்.

மேலும் இவர்கள் தேசிய போட்டிக்குச் சென்று பங்கேற்கும் வகையில் அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இப்பயிற்சி முகாமில் தலைசிறந்த பயிற்சியாளர்கள், கண்காணிப்பாளர்கள் நியமித்து மிகச்சிறந்த பயிற்சிகள் வழங்கி தமிழக அணி தேசிய அளவில் நடைபெறும் வகையில் பயிற்சிகள் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று ஈரோடு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சாலமன் கூறினார்.

மேலும் கல்லூரியின் செயலாளர் சரசுவதி கண்ணையன், கல்லூரியின் நிர்வாக செயலாளர் பிரியா, கல்லூரி முதல்வர் ராமன், உடற்கல்வி ஆசிரியர் கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டனர்.