அமிர்த வித்யாலயம் பள்ளியில் களைகட்டிய ஆண்டுவிழா

மங்கலம் அமிர்த வித்யாலயம் பள்ளியில் 20-வது ஆண்டுவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவானது குத்து விளக்கினை ஏற்றி இறை வழிபாட்டுடன் தொடங்கப்பட்டது. ஒன்பதாம் வகுப்பு மாணவி சஞ்சனா ஸ்ரீ வரவேற்புரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் வித்யாசங்கர் 2024-2025 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை வாசித்து பள்ளியின் வளர்ச்சிநிலை குறித்துப் பேசினார். இவ்விழாவிற்கு வருகை புரிந்திருக்கும் அனைவரையும் வரவேற்றார்.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர் பிரித்திவி கம்பெனி மேலாண்மை இயக்குநர் பாலன் மாணவர்களின் முன்னேற்றம் குறித்துப் பேசினார். இதனை அடுத்து மாணவர்களின் கண் கவரும் நிகழ்ச்சிகள் நம் கண் முன்னே நிகழ்த்திக்காட்டினர் இக்கலை நிகழ்ச்சிகள் நம் கண்ணுக்கு விருந்தாக வந்து நின்றது. இவ்விழாவில் 600 மாணவர்கள் கலந்துகொண்டனர். 2023-2024ஆம் ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவி செல்வி பிரித்திவிகா நன்றியுரை வழங்கினார். சாந்தி மந்திரம் இசைக்கப்பட்டு இவ்விழா இனிதே நிறைவடைந்தது.