கே.எம்.சி.ஹச்‌ செவிலியர் கல்லூரியில் “பாரதி விழா 2023”

பாரதியாரின் 142 -வது பிறந்தநாளை முன்னிட்டு,கே.எம்.சி.ஹச்‌ செவிலியர் கல்லூரியின் தமிழ் மன்றம் சார்பாக “பாரதி விழா 2023” கொண்டாடப்பட்டது.

விழாவின் முதல் நிகழ்வாக பாரதியின் கவித்துவத்தில் விஞ்சி நிற்பது தேசியமே! தெய்வீகமே! என்றத் தலைப்பில் பட்டிமன்றம் அரங்கேற்றப்பட்டது. பட்டிமன்ற நடுவராக டாக்டர் என்.ஜி.பி  கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை‌  பேராசிரியர் செல்வி பங்கேற்று இப்பட்டிமன்றத்தில் செவிலியக் கல்லூரி ஆசிரியர்களும், மாணவர்களும் தத்தம் விவாதத்தை எடுத்துரைத்து, தெய்வீகம் மற்றும் தேசியத்தின் சீரும் சிறப்பினையும் விவரித்துக் கூறி இறுதியாக பாரதியின் கவித்துவத்தில் விஞ்சி நிற்பது தேசியமே! என்று அறிவித்தார்.

அதனை தொடர்ந்து, பாரதி கவிமுழக்கம் போட்டி நடைப்பெற்றது. இதில் டாக்டர் என்.ஜி.பி  கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் சம்பத்குமார் நடுவராக பங்கேற்றார். போட்டியில் பங்கு பெற்ற மாணவர்கள் சிறப்பாக மெட்டமைத்து பாரதி கவிதையை இசைத்தனர்.

இதில்  கல்லூரியின் முதல்வர் மாதவி,  பேராசிரியர்கள்  சிவகாமி இராமநாதன், ஞானஜோதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.