இந்திய அளவில் சிறந்த மருத்துவமனை;ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு சிஐஐ விருது

சுகாதாரத் துறையில் ஓர் அங்கமான ஹோம் ஹெல்த்கேர் சேவையில் சிறப்பான பங்களிப்புடன் சேவையாற்றி வரும் மருத்துவமனைகளுக்கு, இந்திய தொழில் கூட்டமைப்பு-வெஸ்டர்ன் ரீஜியன் இன்னோவேஷன் இன் ஹெல்த்கேர் அண்ட் ஹாஸ்பிடல் டெக்னாலஜி விருதுகள் – 2023 வழங்கப்பட்டன. மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவையின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனை அவ்விருதைப் பெற்றது.

வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இன்றைய உலகம் டிஜிட்டல் யுகமாக மாறிவருகிறது. கல்வி, வங்கி, மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளும் டிஜிட்டல் பரிணாமங்கள் பெற்றுள்ளன. அதிலும், இந்த டிஜிட்டல் மாற்றம் இந்தியாவின் சுகாதரா (ஹெல்த்கேர்) துறையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. 2022-இல் 2.7 கோடியாக இருந்தது 2030-க்குள் 37 கோடியாக, அதாவது பத்து மடங்கு அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இவ்வாறாக, அசுர வேகம் எடுத்து வளர்ந்து வரும் டிஜிட்டல் நுட்பத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள், என்.ஜி.ஓ-க்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் மேலும், சுகாதாரத் துறையிலும் நோயாளிகளுக்கான சேவைகளில் சிறப்பான பங்களிப்புகள் வழங்கிய நிறுவனங்களை தேர்வு செய்து சுகாதாரத் துறையிலும் நோயாளிகளுக்கான சேவையிலும் அவர்களின் சிறப்பான பங்களிப்புகளுக்காக, இந்திய தொழில் கூட்டமைப்பு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், கோயம்புத்தூரில் முதல் தனியார் மருத்துவமனையாக தொடங்கப்பட்டு இன்று வரைக்கும் மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வரும் ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனை இந்தியாவின் சிறந்த ஹோம் ஹெல்த்கேர் இனிஷியேட்டிவ் – 2023 விருது வழங்கி கவுரவித்து உள்ளது.

புற்றுநோய், இதய செயலிழப்பு, கடுமையான நுரையீரல் பிரச்னைகள், இறுதி நிலை சிறுநீரக நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற நரம்பியல் பிரச்னைகள் போன்ற நோய் பாதிப்புகளை எதிர்கொண்டு வாழ்க்கையில் போராடிவரும் நபர்களுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நோய்த்தடுப்பு சிகிச்சை சேவைகளை வழங்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் கடந்த 2017 ஆம் ஆண்டு ‘ஹோம் ஹெல்த்கேர் இனிஷியேட்டிவ்’ திட்டம் ஜி.குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. மக்களின் நலனின் அக்கறையுடன் அன்று தொடங்கிய சேவை இந்நாள் வரையிலும் மக்களின் பேராதரவுடன் சிறப்பாக இயங்கி வருகிறது.

இத்தகைய மகத்தான சேவைக்காக இந்தியாவின் சிறந்த ஹோம் ஹெல்த்கேர் இனிஷியேட்டிவ் மருத்துவமனையாக ஜி.கே.என்.எம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, இந்தியாவில் மிகவும் பிரபலமான இதழான ‘தி வீக்’ – ஹசனா சர்வேயில் தென் இந்தியாவில், கோயம்புத்தூர் மாவட்டத்தின் சிறந்த பன்னோக்கு மருத்துவமனையாக இடம் பிடித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.