விவசாயத்தில் நவீனமயம்: ரூ.2,084 கோடி கடன் வழங்கிய இந்தியா

ஆப்பிரிக்கா நாடான கென்யாவில் காலநிலை மாற்றம் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளாகக் கடுமையான வெப்பம் வாட்டி வதைக்கிறது. அங்குள்ள மக்களின் பொருளாதார நிலைமையும் சொல்லும்படி இல்லை. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. அவ்வப்போதும் வன்முறைகளும் வெடிக்கும். மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிகமான மக்கள் கென்யாவில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கென்யா அதிபர் வில்லியம் சமோய் ருடோ பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்டோரைச் சந்தித்து இரு நாடுகளுக்கிடையில் உள்ள உறவை வலுப்படுத்தும் விதமாக சந்திப்புகள் நடந்தன. மேலும், இந்தியா-கென்யா இடையே பாதுகாப்பு, வர்த்தகம், எரிசக்தி, உள்கட்டமைப்பு, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளின் மேம்பாட்டுக்கான ஒப்பந்தங்கள் கையொப்பம் ஆனது.

அதனுடன், வேளாண்மைத் துறையில் நவீனத்தை செயல்படுத்த இந்தியா கென்யாவிற்கு 250 மில்லியன் கடன் உதவி வழங்கியுள்ளது. அதாவது, இந்தியா மதிப்பில் ரூபாய் 2,084 கோடி ஆகும்.