மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.20க்குட்பட்ட சத்தி சாலை, கணபதி, கேவிஜி நகர் முதல் எஸ்.எம்.ஆர்.டேங்க் வரை சாலை தடுப்பு (சென்டர் மீடியன்) பகுதியில் ஒரு தெரு விளக்கு கம்பத்திற்கு 2 விளக்குகள் வீதம் 50 தெரு விளக்கு கம்பங்களுக்கு மொத்தம் 100 எண்ணிக்கையிலான தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இதில் மாநகரப் பொறியாளர் முருகேசன், உதவி ஆணையர் ஸ்ரீதேவி, உதவி செயற்பொறியாளர் எழில், உதவி பொறியாளர்கள் சக்திவேல், இளங்கோ ஆகியோர் உள்ளனர்.