இந்துஸ்தான் கல்லூரியில் ரோபோடிக் திறன் புத்தாக்க பயிற்சி

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மற்றும் ஸிக்கர்ஸ் எம்பிளாய்மென்ட் பிரைவேட் நிறுவனம் இணைந்து 5 நாட்கள் ரோபோடிக் திறன் மற்றும் புத்தாக்க பயிற்சியை நடத்தின.

புது தில்லி இந்திய தொழில்நுட்ப கல்லூரியின் பொருளாதார உதவியுடன் நடத்தப்பட்ட இப்பயிற்சியில் சிறப்பு விருந்தினராக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஆறுமுகராஜா பங்கேற்றார்.

அவர் பேசுகையில், ஸிக்கர் நிறுவனத்தின் பயிற்சி முறையான புதிய படைப்பை குறைந்த வசதிகளோடு நிரூபிக்கும் முறையை பின்பற்றி, கற்றல் மற்றும் கற்பித்தலை மகிழ்ச்சியான தருணமாக மாற்றியது நிறைவைத் தந்தது என்றார். மேலும், புதுமையான கண்டுபிடிப்போடு வரும் மாணவர்களை ஐ.ஐ.டி.டி.யின் புத்தாக்க நிறுவனத்தில் தங்களின் நிறுவனத்தை துவங்குவதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இதில் கலந்துகொண்ட கல்லூரி முதல்வர் ஜெயா, இந்த பயிற்சி மாணவர்களின் அறிவை மட்டுமல்லாமல் அவர்களின் ரோபோடிக் திறனையும் அதிகப்படுத்தியுள்ளதாக கூறினார்.

பயிற்சியில் பங்கேற்ற அனைத்து மாணவர்களும் குழுவாகப் பிரிக்கப்பட்டு, தனி மென்பொருள் வசதியுடன், ரோபாட்டிக்ஸை உருவாக்கி அதன் செயல்திறனை சோதித்து பார்த்தனர். இறுதியில் பயிற்சியாளர்கள் மற்றும் பல்வேறு பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழு, மாணவர்களின் செயல்திறனை மதிப்பீடு செய்து அவர்களை பாராட்டினர்.

இதனை தொடர்ந்து, கல்லூரி நிர்வாக அறங்காவலர்  சரஸ்வதி கண்ணையன், இணைச் செயலாளர் பிரியா சதீஷ் பிரபு, தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் கருணாகரன், அறிவியல் மற்றும் மனிதவியல் துறைத்தலைவர் உமா, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்  மதுசூதனன் மற்றும் சேகர் உள்ளிட்டோர் பயிற்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.