நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு!

கோயம்புத்தூரில் பெய்த கனமழையின் காரணமாக மாநகராட்சிக்கு உட்பட்ட செல்வசிந்தாமணி குளத்தில் மதகு வழியாக தண்ணீர் வெளியேறுவதை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, குளத்திலுள்ள ஆகாயத்தாமரை மற்றும் குப்பைகளை அகற்றி தண்ணீர் சீராக வெளியேற நடவடிக்கை மேற்கொள்ள அலுவலருக்கு உத்தரவிட்டார். உடன் மாநகராட்சி துணை ஆணையாளர் சிவகுமார், உதவி ஆணையர் செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, சுகாதார ஆய்வாளர் தனபாலன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்.