ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தும் Coca Cola நிறுவனம்

தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை தெரிவிக்கும் வகையில் முகுல் சர்மா தனது Twitter பக்கத்தில் இதை பற்றி தெரிவித்துள்ளதாவது : Coca Cola நிறுவனம் குளிர்பான சந்தையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் தடம் பதிக்க உள்ளது.

இந்திய சந்தையில் பட்ஜெட் மற்றும் மிட் ரேஞ் போன்களை இந்நிறுவனம் அறிமுகம் செய்வது குறித்த நிலையில் , தற்போது வெளியாகி உள்ள மொபைல் போனின் பின்புறம் Coca Cola நிறுவனத்தின் Trade Mark சிவப்பு நிறத்தில் அமைந்துள்ளது.

மேலும் இதற்க்காக பிரபல ஸ்மார்ட் போன் brand உடன் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து , எந்த ஸ்மார்ட் போன் நிறுவனத்துடன் Coca Cola கூட்டணி அமைக்கும் என்பது பற்றி கேள்வியாகவே உள்ளது. அது மட்டுமில்லாமல் சந்தையில் இருக்கும் தேவையை பொறுத்து மாடல்கள்  வெளிவரும், அந்தவகையில் Coca Cola நிறுவனம் களமிறங்குகிறது.

இருந்தாலும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை இன்னும் Coca Cola நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.