எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில்  “முதல் தலைமுறை தொழில்முனைவோர் சந்திப்பு”

தேசிய தொழில்முனைவோர் தின முன்முயற்சியின் ஒரு பகுதியாக, எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் புத்தாக்கம், தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பிரிவு இணைந்து “முதல் தலைமுறை தொழில்முனைவோர் சந்திப்பு’23” எனும் நிகழ்வினை நடத்தினர்.

நிகழ்வில் ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், ஏஆர்/விஆர்/மெட்டாவெர்ஸ், டேட்டா சயின்ஸ்/ ஏஐ/ எம்எல், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 15 முதல் தலைமுறை தொழில்முனைவோர் சந்தித்துள்ளனர்.

இந்த முயற்சியானது எஸ்.என்.எஸ்.சி.டி-யின்  புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பிரிவின் (I&EDC) பேராசிரியர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இத்தகைய முதல் தலைமுறை தொழில்முனைவோரின் சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் இளைஞர்களிடையே புதுமை மற்றும் தொழில்முனைவுகளை மேம்படுத்தும் வகையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.