சங்கரா கல்லூரி சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சிபட்டறை

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல்  கல்லூரியின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான TNSCST (2022-2023) நிதியுதவியுடன் ஒரு நாள் ஆசிரியர் பயிற்சிப் பட்டறையைச்   செவ்வாய்க்கிழமை நடத்தியது.

நிகழ்விற்குக்  கல்லூரி முதல்வர்  ராதிகா பங்கேற்று பேசுகையில்; கற்பித்தல் முறைகளில் ஐசிடி கருவிகளை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துத்துரைத்தார்.  சங்கரா கல்வி நிறுவனங்களின் துணைச் செயலர் நித்யா ராமச்சந்திரன் தலைமை வகித்து விழாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். நிகழ்விற்குத் துணை முதல்வர்  பெர்னார்ட் எட்வர்ட் வாழ்த்துரை வழங்கினார்.

இப்பயிற்சிப் பட்டறையின் முதல் அமர்வின்  சிறப்பு விருந்தினராக ஸ்புரௌட் நாலேட்ஜ் சொலுஷன் பிரைவேட் லிமிடெட்டின்  இயக்குநர் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசுகையில், AI அதன் சொந்த உள்ளடக்கங்களை உருவாக்கியது ஜேட் ஜிபிடி, மெட்டாவர்ஸ், போன்ற புதிய கண்டுபிடிப்புகளை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இருவரும்  ஏற்றுக்கொள்கிறார்கள்., என்றார்.

இரண்டாவது அமர்வின்  சிறப்பு விருந்தினராக  முதுகலை கணினி அறிவியல் ஆராச்சித்துறை அரசுக் கலைக் கல்லூரியின் இணைப்பேராசிரியர்  மாலதி , கலந்துகொண்டு தமது பயிற்சியில் சாக்ரடீஸ், நியர்போர்டு, ஜாம்போர்டு, ஸ்கிரீன் காஸ்டோமீட்டர், ப்ரசன்டேஷன் டீயூப்  ரெக்கார்டர் ,க்னோமியோ போன்ற ஐசிடி மென்பொருள்களைப் பயன்படுத்துவது குறித்து எடுத்துரைத்தார். அதனைத்தொடர்ந்து, கோவை முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி, கல்வியில் ஐசிடி கருவிகளின் முக்கிய பங்கு குறித்து விளக்கினார்.

முன்னதாக நிகழ்வின் ஏற்பாடுகளைத் தகவல் தொழில்நுட்ப  துறையின் தலைவர் முத்துச்சுடர் செய்திருந்தார். இதில் அரசுப்பள்ளிகளின் 225 ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.