தூய்மைக்கு எடுத்துக்காட்டு வெண்மை -மருத்துவ நிகழ்ச்சியில் நாகராஜன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர்

இந்தியன் சொசைட்டி ஆஃப் கிரிட்டிகல் கேர் மெடிசின் கழகத்தின் தினநாள் கொண்டாட்ட நிகழ்ச்சி கோவை கிளை சார்பாக நடைபெற்றது.

சிறிய கொப்புளங்கள் மற்றும் புன்களால் உடல் உறுப்புகளில் பாதிப்பு ஏற்படுவது மற்றும் அதனால் உண்டாகும் அபாயம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இந்த ஆண்டு “செப்சிஸைத் தடுப்பது, சிகிச்சை அளிப்பது, தோற்கடிப்பது” என்ற தலைப்பில் இந்தியன் சொசைட்டி ஆஃப் கிரிட்டிகல் கேர் மெடிசின் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

மேலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் நிறுவனர் கே.ஆர் நாகராஜன் சிறப்புரை வழங்கினார். அப்போது பேசிய அவர், கடவுளாக வாழ்பவர்கள் மருத்துவர்கள். எப்பேர்ப்பட்ட நார்திகவாதிகளாக இருந்தாலும் கூட தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெரும் தங்களின் உறவுகளை காப்பாற்றும் மருத்துவர்களை கைகூப்பி வணங்குவர். இறைவனுக்கு நிகரானவர்கள் மருத்துவர்கள் என மருத்துவர்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார்.

காணொளி வாயிலாக கலந்து கொண்ட‌ சிறப்பு விருந்தினர் கல்வியாளர், பாரதீய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் பேசுகையில், நம்மில் பலர் உடல் சார்ந்து உண்டாகும் சில பிரச்னைகளை அலட்சியமாக விட்டு விடுகிறோம். இதனால் எதிர்பாராத விளைவுகளை சந்திக்க நேர்கிறது. ஆகையால், எப்போதும் வருமுன் காப்போம் என்று இருக்க வேண்டும். தீவிர சிகிச்சை பிரிவில் செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் பணிகள் இன்றியமையாதது என்று கூறினார்.

இவரை தொடர்ந்து பி.எஸ்.ஜி மருத்துவமனை இயக்குநர் டாக்டர் புவனேஸ்வரன் பேசினார். அவர் கூறியதாவது , எலக்ட்ரான்களின் நகர்வுகள் இல்லையெனில் மின்சாரம் இல்லை. அதுபோலவே நமது உயிர் அணுக்களும் செயல்படுகிறது. இதுவே வேதாத்திரியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ துறையில் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் இருக்கிறது என மருத்துவத்துடன் பிரபஞ்ச ஆற்றலை ஒப்பிட்டு பேசினார். இதனையடுத்து, செப்சிஸைத் தொடர்பாக சிறப்பு கருத்தரங்கு நடந்தது.