எஸ்.என்.எஸ் பள்ளியில் விளையாட்டு விழா

எஸ். என். எஸ் பள்ளியின் எட்டாம் ஆண்டு விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு  விருந்தினராகத் துணைக் காவல் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி) தையல் நாயகி கலந்துகொண்டு விழாவினை தொடக்கி வைத்தார். மாணவர்கள் அணிவகுப்புடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தடகள விளையாட்டுப் போட்டி , சிலம்பம், கராத்தே, ஜும்பா மற்றும் யோகா உள்ளிட்டவை இடம்பெற்றன. இதையடுத்து, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளியின் முதல்வர் ஸ்ரீ வித்யா பிரின்ஸ் மற்றும் துணை முதல்வர் உஷாராணி ஆகியோர் வாழ்த்தி பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.