இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் ஆபத்தான பாஸ்வேர்ட் எது?

எளிமையான பாஸ்வேர்ட்களை  மாற்றக்கோரி பல ஆண்டுகளாக சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்து வரும் நிலையில் , தற்போது இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும்  பலவீனமான 20 பாஸ்வேர்ட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
நோர்ட்பாஸ் எனப்படும் கடவுச்சொல் மேலாண்மை மென்பொருள் நிறுவனம் 45 மில்லியன் கணக்குகள் வைத்து நடத்திய ஆய்வில், மிகவும் பலவீனமான பாஸ்வேர்ட் என கருதப்படும் “123456”  பாஸ்வேர்டை அதிகப்படியான மக்கள் பயன்படுத்தி வருவதாக அறியப்பட்டுள்ளது.
இந்தியாவில், “123456” பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மேலும், இரண்டாவது இடத்தில் சுமார் 40 மில்லியன் கணக்குகளில் “அட்மின்”  என்ற பாஸ்வேர்டும் , மூன்றாவது இடத்தில் 13.7 மில்லியன் கணக்குகளில் “12345678”  எனும் பாஸ்வேர்டும் இடம் பெற்றுள்ளன.
2021ல் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்திய \"Password\" இது தான்! இப்படி ஒரு சுவாரஷ்யம் இருக்கா? - மனிதன்
இது குறித்து வல்லுநர்கள்  கூறுகையில், ”இந்த பாஸ்வேர்ட்களை எளிதாக ஹேக் செய்ய முடியும். இதில் மோசமான விஷயம் என்னவென்றால் உங்கள் கம்யூட்டர் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பதே உங்களுக்குத் தெரியாது. அப்போது நீங்கள் மற்ற தளங்களைப் பயன்படுத்தும் போது அந்த பாஸ்வேர்டும் அவர்கள் கைகளுக்குச் செல்லும். எனவே கவனமாக இணையத்தைப் பயன்படுத்துங்கள். வலிமையான பாஸ்வேர்ட்டை வைக்கவும், தேவையில்லாத லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்” என்றனர்.
மேலும், சர்வதேச அளவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்டுகளில் சுமார் 31%  ‘123456789’, ‘12345’, ‘000000’ உள்ளிட்ட எண்களாகவே  இருக்கிறது . இத்தகைய உலகளவில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்ட்களில் சுமார் 70% தரவுகளை  ஒரே நொடியில் ஹேக் செய்ய முடியும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனவே, பாஸ்வேர்ட்களை எளிதாக வைக்கலாம், அதற்கு பதிலாக பாஸ்கீக்களை பயன்படுத்தலாம் என்று வலியுறுத்துகின்றனர்.