எஸ்.என்.எம்.வி. கல்லூரியில் ‘பிஸ் பிளிட்ஸ்’  கண்காட்சி 

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இன்ஸ்டிடியூஷன் இன்னோவேஷன் கவுன்சில் மற்றும் ஐஃபோகஸ் இன்குபேஷன் யூனிட் சார்பாக மாணவர்களின் ‘பிஸ் பிளிட்ஸ்’ கண்காட்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் சுப்பிரமணி தலைமை வகித்தார். அவர் தனது உரையில், மாணவர்கள் வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது அதை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதிய தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்று கூறி வளாகத்தில் புதிய தொழில்முனைவோர்களாக உருவெடுத்த மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

வளாகத்தில் 91 விற்பனையகங்கள் செயல்பட்டன. விற்பனையகத்தில் பங்குபெற்ற மாணவர்களுக்குப் பொருளின் தரம், வடிவமைப்பு, உருவாக்கும் விதம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு பெஸ்ட் இன்னோ ஃபோர்ஜ் விருது, தி ரெவின்யூ டைனமோ விருது, ஷோகேஸ் ஸ்பார்க்கிள் விருது என 9 விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வினை ஐஐ சி  ஒருங்கிணைப்பாளர் செல்வ ஜெயந்தி  ஒருங்கிணைத்தார். இதில் 2500 மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.