இந்துஸ்தான் மாணவர்கள் தேசிய அளவில் சாதனை

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர்கள் AICTE-ன் தேசிய அளவிலான பாரத் சைக்கிள் சேலஞ்ச் போட்டியில் EV கார்கோ கேட்டகிரியில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்தனர்.

இது சிறிய அளவிலான மின்சாரம் மற்றும் மிதிவண்டியாக ஓடக்கூடிய அதிகபட்சம் 200 கிலோ கிராம் எடை வரையிலுமான சரக்கு சுமந்து செல்லும் வண்டி. ஒரு மின்சார சார்ஜுக்கு 200 கிலோ மீட்டர் செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட வண்டி. இந்த வண்டியில் நான்கு விதமான Variant பொருத்தப்பட ஏதுவாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அவை கூட்ஸ் டோர் டெலிவரி, காய்கறி விற்பனை, சூரிய ஒளி பயன்பாட்டோடு ஐஸ்கிரீம் விற்பனை மற்றும் குழந்தைகளோடு பயணிக்கும் வகையில் சிறப்பமைப்பு போன்ற சமுதாயத்திற்கு பயன்படக்கூடிய அமைப்புகளாகும். இந்த போட்டியில் 600க்கும் மேற்பட்ட டீம் பங்கேற்றனர். தங்களுடைய சிறப்பான தொழில்நுட்பத்தாலும், கட்டமைப்பினாலும், மற்ற திறமைகளாலும் இந்துஸ்தான் மாணவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

இந்தக் குழுவில் இயந்திரவியல் துறை, விவசாயத்துறை, மின்சாரத்துறைகளைச் சேர்ந்த நான்கு மாணவர்களும் ஒரு மாணவியும் பங்கேற்றனர். இந்த குழுவுக்கு முனைவர் ராஸ் மேத்யூ வழிகாட்டியாக பங்களித்தார். இந்த வண்டியை உருவாக்க AICTE உதவித் தொகையாக ரூபாய் 40 ஆயிரம் கொடுத்து இரண்டு மாத கால அவகாசம் கொடுத்தது. இப்பொழுது இந்த சிறப்பு வாய்ந்த போட்டியில் வெற்றி பெற்றதற்கு பரிசுத்தொகையாக ரூபாய் ஒரு லட்சம் காசோலையை AICTE Chairman Dr T G Seetharaman வழங்கினார்.

இந்த சிறப்பான சாதனையை கல்லூரி செயலாளர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலாளர் Dr.பிரியா சதீஷ், தலைமை நிர்வாக அதிகாரி Dr.K. கருணாகரன், கல்லூரி முதல்வர் Dr.J.ஜெயா, டீன் இன்னோவேஷன் Dr.K.சிவா மற்றும் துறைத்தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.